Enable Javscript for better performance
நம்புதாளையில் வடமாடு மஞ்சுவிரட்டு- Dinamani

சுடச்சுட

    

    திருவாடானை அருகே உள்ள நம்புதாளை சித்தி விநாயகர் முத்துமாரியம்மன் கோயில் ஆடிதிருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு புதன்கிழமை நடைபெற்றது.
    கடந்த செவ்வாய்கிழமை காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. அன்றைய தினம் பூக்குழி இறங்குதல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து  புதன்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. 
    இதில் மதுரை, சிவகங்கை, புதுகோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாட்டங்களில் இருந்து 15-க்கு மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. அவற்றை அடக்க நூற்றுக்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் முயன்றனர். ஒரு மாட்டை அடக்க 10 பேர் கொண்ட குழுவினர் களத்தில் இறக்கிவிடப்பட்டனர். 
    காளைகளை அடக்கிய வீரர்களுக்கு ரூ.10ஆயிரமும் அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.10ஆயிரமும் பரிசுகளை விழாக் குழுவினர் வழங்கினார்கள். மஞ்சுவிரட்டை சுற்று வட்டாரத்தில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் ரசித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai