Enable Javscript for better performance
பரமக்குடி மண் பரிசோதனை நிலையத்தில் நிதி ஆயோக் குழு ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    பரமக்குடி மண் பரிசோதனை நிலையத்தில் நிதி ஆயோக் குழு ஆய்வு

    By DIN  |   Published on : 25th July 2019 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மண் பரிசோதனை நிலையத்தில், நிதி ஆயோக்குழு உறுப்பினர் ஸ்ருதி கண்ணா, செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
    நாடு முழுவதும் 117 மாவட்டங்கள் கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் தமிழகத்தில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் இடம் பெற்றன.  
    இந்த மாவட்டங்களில் அனைத்து துறைகளின் சார்பில் முன்னேற்ற திட்டங்கள் நிதி ஆயோக் குழு அறிவுரைப்படி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திட்டப் பணிகளின் முன்னேற்றத்தை நிதி ஆயோக் குழு ஆய்வு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நிதி ஆயோக்குழு உறுப்பினர் ஸ்ருதி கண்ணா தலைமையிலான குழுவினர் பரமக்குடி மண் பரிசோதனை நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
    ஆய்வக உபகரணங்கள், தினசரி ஆய்வுப் பணிகள், கடந்த ஆண்டுகளில் மண்வள அட்டை இயக்கம் மூலம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்ட  மண்வள அட்டை ஆகியவை குறித்து ஆய்வக வேளாண்மை அலுவலர்களிடம் குழுவினர் கேட்டறிந்து ஆலோசித்தனர். 
    மாவட்டத்தில் மண்வள அட்டை இயக்கம் மூலம் 2,06,045 மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் சராசரி கார, அமில நிலை, பேரூட்டம் மற்றும் நுண்ணூட்ட அளவு குறித்த விவரங்கள் ஊட்டச்சத்து வரைபடம் மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.  
    இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சொர்ணமாணிக்கம், பரமக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai