Enable Javscript for better performance
பாம்பன் பாலத்தில் இருந்து கடலில் குதித்த முதியவர் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    பாம்பன் பாலத்தில் இருந்து கடலில் குதித்த முதியவர் மீட்பு

    By DIN  |   Published on : 25th July 2019 07:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகன், மகள் தன்னை பராமரிக்காததால் பாம்பன் சாலைப் பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவரை மீனவர்கள் மீட்டு காவல்துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனர். 
    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்தவர் சந்திரமோகன் (65) . மகன் மற்றும்  மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் சந்திரமோகன் மனைவி சுபத்ராவுடன் வசித்து வந்துள்ளர். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன் சுபத்ரா இறந்து விட்டதால் சந்திரமோகனை கவனித்துக்கொள்ள மகன், மகள் முன்விரவில்லை.
    இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சந்திரமோகன், பாம்பன் சாலைப் பாலத்தில் இருந்து புதன்கிழமை கடலில் குதித்துள்ளார். இதனை கண்ட மீனவர்கள் விரைந்து சென்று அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மண்டபம் கடலோர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். இதனையடுத்து, மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.    
    காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மகன் மற்றும் மகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பிள்ளைகள் பராமரிக்கத் தவறியதால் முதியவர் தற்கொலைக்கு முன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai