Enable Javscript for better performance
முதுகுளத்தூரில் இரு தரப்பினர் மோதல்: கருவூல அதிகாரி உள்பட 4 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    முதுகுளத்தூரில் இரு தரப்பினர் மோதல்: கருவூல அதிகாரி உள்பட 4 பேர் மீது வழக்கு

    By DIN  |   Published on : 25th July 2019 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதுகுளத்தூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கருவூல மண்டல அதிகாரி உட்பட 4 பேர் மீது புதன்கிழமை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தனியார் அறக்கட்டளையை நிர்வகிப்பதில் இருதரப்பினர் இடையே மோதல் இருந்து வருகிறது. 
    இதில் ஒரு தரப்பில் அன்னதானம் வழங்கும் போது மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். அப்போது தங்கராஜ் (25) என்பவர் தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த தங்கராஜ் ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர், முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், முதுகுளத்தூர் ஆசாரி தெருவைச் சேர்ந்த, திருச்சி கருவூலத்தில் மண்டல அலுவராக பணிபுரிந்து வரும்  பழனிச்சாமி, நந்தக்குமார், ராஜசேகர் ஆகிய 3 பேர் மீதும் மற்றொரு தரப்பில் பழனிச்சாமி கொடுத்த புகாரில் தங்கராஜ் மீதும் காவல்துறை சார்பு ஆய்வாளர் நாகராஜபிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai