Enable Javscript for better performance
முதுகுளத்தூரில் தமுமுக நிர்வாக பொதுக்குழு  கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    முதுகுளத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாக பொதுக்குழு  கூட்டம் நகர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்திற்கு தமுமுக பேரூர்தலைவர் ஜபருல்லாகான் தலைமை  வகித்தார். மாவட்ட தலைவர் எஸ்.முகம்மது இக்பால், மமக பேரூர் செயலர்  நாகூர் மீரா, மாவட்டச் செயலர் முஹிதுல்லா, மாவட்ட பொருளாளர் வாவா ராவுத்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் அனுபவமுள்ள 2 மருத்துவர்களை இடமாற்றம் செய்ததை கண்டித்தும் போதிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்கக் கோரியும்  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai