Enable Javscript for better performance
ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றம்

    By DIN  |   Published on : 25th July 2019 07:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    இந்நிகழ்ச்சிக்கான வாஸ்து சாந்தி நில தூய்மை செய்தல் புதன்கிழமை நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் விவரம்: ஜூலை 31 ஆம் தேதி ஆடி அமாவாசை,  ஆக 2 ஆம் தேதி  அம்பாள் தேரோட்டம், ஆகஸ்ட் 4 இல் சுவாமி, அம்பாள் தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளுதல், ஆகஸ்ட் 5 இல் இரவு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், ஆகஸ்ட் 10 ஆம் தேதி சுவாமி,அம்பாள் கெந்தமாதன பர்வம் மண்டகப்படி ஆகியவை நடைபெறும். வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடைபெற உள்ளது. இவ்விழா 17 நாள்கள் நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai