Enable Javscript for better performance
ராமநாதபுரத்தில் ஜூலை 26 மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் பெரியார் நகர் உள்ளிட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
     இதுகுறித்து ராமநாதபுரம் நகர் மின் விநியோகப் பிரிவு உதவி செயற்பொறியாளர் ஜி.கங்காதரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் இரு வழிச்சாலையானது நான்கு வழிச்சாலையாக (அச்சுந்தன் வயல் முதல் இசிஆர் சந்திப்பு வரை) மாற்றப்பட்டுவருகிறது. அந்தப் பணிக்கு மார்டின் டிபி முதல் எம்.ஜி. மஹால் வரை உள்ள பகுதகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
    அதனடிப்படையில் குண்டுக்கரை முருகன் கோயில் தெரு, வனசங்கரி அம்மன் கோயில் தெரு, எல்.ஐ.சி., எம்.ஜி.மஹால், கூரியூர், பெரியார் நகர், நொச்சியூரணி, எட்டிவயல், எல்.கருங்குளம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai