Enable Javscript for better performance
ராமநாதபுரத்தில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) நடைபெற உள்ளது.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில் வரும் வெள்ளிக்கிழமை பகல் 11.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
    இதில் விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை மட்டும் விவாதிக்க வேண்டும். விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai