முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
அரசுப் பள்ளியில் விஷப்பூச்சி தொல்லை: மாணவர்கள் அச்சம்
By DIN | Published On : 30th July 2019 09:05 AM | Last Updated : 30th July 2019 09:05 AM | அ+அ அ- |

கமுதி அருகே அரசு பள்ளி வளாகத்தில் காணப்படடும் விஷ பூச்சிகளால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கமுதி அருகே 480 மாணவர்கள் படித்து வரும் பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி 30 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. பள்ளி வளாகத்தில் அடர்ந்து வளர்ந்த சீமை கருவேல மரங்கள், 4 ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்டன. இருந்தபோதிலும், மீண்டும் வளர்ந்து வரும் சீமை கருவேல மரங்களை முறையாக அகற்றாததால், பள்ளி விளையாட்டு மைதானத்தில், சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து, ஆக்கிரமித்துள்ளன.
இதனால் மாணவர்கள் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல், விஷ பூச்சிகளின் நடமாட்டத்தால் அச்சமடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பேரையூர் அரசு மேல்நிலைபள்ளியில் அடர்ந்து வளர்ந்து வரும் சீமை கருவேல மரங்களை அகற்றி, மாணவர்களின் அச்சத்தை போக்க, நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.