Enable Javscript for better performance
பரமக்குடி கண்மாய் நீர்ப்பிடிப்புப் பகுதியில்  கல்லூரி, பள்ளி, குடியிருப்புகளால் நிலத்தடி நீராதாரம் ப- Dinamani

சுடச்சுட

    

    பரமக்குடி கண்மாய் நீர்ப்பிடிப்புப் பகுதியில்  கல்லூரி, பள்ளி, குடியிருப்புகளால் நிலத்தடி நீராதாரம் பாதிப்பு

    By DIN  |   Published on : 01st June 2019 07:40 AM  |   அ+அ அ-   |    |  

    பரமக்குடியிலுள்ள பல்வேறு கண்மாய்களின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதால், நிலத்தடி நீர் ஆதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
    பரமக்குடி பகுதியில் எமனேசுவரம்-குமாரக்குறிச்சி கண்மாய், வேந்தோணி கண்மாய், அரியனேந்தல், உரப்புளி கண்மாய், காட்டுப்பரமக்குடி, அண்டக்குடி, பாம்புவிழுந்தான், தெளிச்சாத்தநல்லூர் கண்மாய் என பல்வேறு கண்மாய்கள்  நகரைச் சுற்றிலும் அமைந்துள்ளன. இந்த கண்மாய்ப் பகுதிகளில் வைகை ஆற்று பாசன நீர் வலது மற்றும் இடது பிரதானக் கால்வாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. 
    இதனால், இப்பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரமும் பாதுகாக்கப்பட்டது. இந்த கண்மாய் நீரைப் பயன்படுத்தி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல், பருத்தி, மிளகாய், சோளம், கேழ்வரகு, வாழை, தென்னை மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்து வந்தனர்.
    கட்டுமானங்களால் விவசாயம் பாதிப்பு: பரமக்குடி நகரைச் சுற்றியுள்ள கண்மாய் பகுதிகளில் 10 அடி ஆழம் வரை பாசன நீர்த்தேக்கக்கூடிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான வேந்தோணி கண்மாய், எமனேசுவரம் -குமாரக்குறிச்சி கண்மாய், தெளிச்சாத்தநல்லூர் கண்மாய்களிலும் மற்றும் உரப்புளி, அரியனேந்தல் கண்மாய்கள் நிறைந்து பாசனநீர் வெளியேறும் தத்துப் பகுதிகளிலும் தனியார் பள்ளிக் கட்டடங்களும், அரசு உறுப்புக் கலைக் கல்லூரி மற்றும் அடுக்குடிமாடி குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளன. மேலும், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விளைநிலங்கள் வீட்டு மனைகளாகப் பிரிக்கப்பட்டு, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 
    இதனால், இக்கண்மாய்களில் பாசனநீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இக்கண்மாய் பாசனநீரை வாழ்வாதாரமாகக் கொண்டு விவசாயம் செய்து வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தண்ணீர் தேங்கும் இடங்கள் முழுவதும் வீட்டுமனைகளாலும், கட்டடங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், நிலத்தடி நீராதாரம் வெகுவாகக் குறைந்து, எதிர்கால சந்ததியினருக்கு நிலத்தடி நீர் ஆதாரம் என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
    இதுபோன்று கண்மாய் நீர்ப்பிடிப்புப் பகுதியில் கட்டப்படும் கட்டடங்களுக்கு எந்த வங்கிகளும் கடன் வழங்குவதில்லை. ஆனால், சில இடைத்தரகர்கள் குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி வங்கிகளை ஏமாற்றி கடன் பெற்று கட்டடங்களை கட்டுகின்றனர். நகராட்சியிலும் அனுமதி இல்லாத நிலையில், இப்பகுதிகளில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள தனியார் பள்ளிகளையும், கல்லூரிகளையும் காண்பித்து, கோடிக்கணக்கான ரூபாய்க்கு நிலங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
    நீதிமன்றங்கள் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் குடியிருப்புகள் உள்ளிட்ட எந்தவித கட்டடங்கள் கட்டுவதற்கும் தடைவிதித்து பலமுறை எச்சரித்தும், தொடர்ந்து இடைத்தரகர்களால் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இதனைத் தடுக்க, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்க வேண்டும் என, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp