Enable Javscript for better performance
3 நாள்களாக மின்விநியோகம் இல்லை: இருளில் மூழ்கியது மயிலாடுவயல் கிராமம்- Dinamani

சுடச்சுட

    

    3 நாள்களாக மின்விநியோகம் இல்லை: இருளில் மூழ்கியது மயிலாடுவயல் கிராமம்

    By DIN  |   Published on : 01st June 2019 07:42 AM  |   அ+அ அ-   |    |  

    திருவாடானை அருகே மயிலாடுவயல் கிராமத்தில் கடந்த 3 நாள்களாக மின் விநியோகம் இல்லாததால் அந்த கிராமமே இருளில் மூழ்கியது. இது குறித்து பொதுமக்கள் புகார் கொடுக்க மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றபோது அங்கு பணியாளர்கள் யாரும்  இல்லாத நிலையில், அங்கிருந்த ஒரு ஊழியரும் தூங்கிக் கொண்டிருந்ததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.
    திருவாடானை அருகே மயிலாடுவயல் கிராமத்தில் சுமார் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த மூன்று நாள்களாக மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதால் கிராமமே இருளில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து புகார் மனு அளிக்க அப்பகுதியினர் திருவாடானை மின்வாரிய அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை சென்றுள்ளனர். அப்போது உதவி மின்பொறியாளர் உள்பட மின்வாரிய ஊழியர்கள் யாரும் அலுவலகத்தில் இல்லையெனக் கூறப்படுகிறது. ஆனால்  மின்சாரத்தை சிக்கனப்படுத்த வேண்டிய மின்வாரிய அலுவலகத்தில் மின் விளக்குகள் மற்றும் மின்விசிறி இயங்கிய நிலையில் மின்வாரிய ஊழியர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் பொதுமக்களுக்கு சரியான பதிலும் அளிக்கவில்லையாம். இதனால் புகார் கொடுக்கச் சென்ற கிராம மக்கள் செய்தியாளர்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 
    மேலும் பணி நேரத்தில் பணியில் இல்லாத மின்வாரிய அலுவலர்கள் மீதும், அலுவலகத்தில் உறங்கிய ஊழியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மயிலாடுவயல் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp