பரமக்குடியில் பெண் விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவன பொதுக் குழுக் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

பரமக்குடியில் பெண்கள் நல அறக்கட்டளை சார்பில், பெண் விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவன முதலாம் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

பரமக்குடியில் பெண்கள் நல அறக்கட்டளை சார்பில், பெண் விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவன முதலாம் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
         பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் பெண் விவசாயிகளுக்கான உற்பத்தியாளர்கள் சங்க பொதுக் குழுக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தலைமையேற்று நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் எஸ். மதியழகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஏ. சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.     பெண் விவசாய உற்பத்தியாளர்களின் திட்டம் குறித்து, முதன்மைச் செயல் அலுவலர் ஜெ. ஹெலன் பேசினார். மகளிர் திட்ட இயக்குநர் கே. குருநாதன், விவசாய வேளாண்மை இணை இயக்குநர் எல். சொர்ணமாணிக்கம், தோட்டக்கலை துணை இயக்குநர் கே.ஜே. கிஷோர்குமார் ஆகியோர் விவசாய உற்பத்திப் பொருள்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து விளக்கமளித்தனர். 
      பெண் விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில், ஒவ்வொரு பெண் விவசாயிகளும் ரூ .1000 செலுத்தி உறுப்பினராவதுடன், இந்நிறுவனத்தில் மொத்தம் ஆயிரம் உறுப்பினர்கள் மட்டும் இணைந்து செயல்படுத்துவது பற்றியும், இந்த பெண் விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு நபார்டு வங்கிகள் மூலம் நிறுவனத்தின் பங்குக்கு இணையான நிதி பெற்று, விவசாய உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துதல் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.      இக்கூட்டத்தில், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரம் பெண்கள் உறுப்பினர் கட்டணம் செலுத்தி கலந்துகொண்டனர். 
     முன்னதாக, பெண்கள் நல அறக்கட்டளை நிர்வாகி கே. கல்யாணி வரவேற்றார். வி. திருசுதன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com