ராமநாதபுரம் நகராட்சியில் பெண்களுக்கு 17 வார்டுகள் ஒதுக்கீடு

ராமநாதபுரம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் தற்போது பெண்களுக்கு 17 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

ராமநாதபுரம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் தற்போது பெண்களுக்கு 17 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வார்டு வரையறைகள் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் வார்டுகளில் இடம் பெற்ற தெருப்பகுதிகள் மாற்றம் செய்யப்பட்டு சில நாள்களுக்கு முன்பு வாக்குச்சாவடி வாரியாக அவை வெளியிடப்பட்டன. 
ராமநாதபுரம் மாவட்டத்தில்  ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், கீழக்கரை ஆகிய நகராட்சிகளில் ஆண்கள் போட்டியிடும் வார்டுகள், பெண்கள் போட்டியிடும் வார்டுகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளன. 
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியில் தாழ்த்தப்பட்டோர் பொதுப் பிரிவில் 28-ஆவது வார்டு, தாழ்த்தப்பட்டோர் பிரிவு பெண்களுக்கு மட்டும் 26-ஆவது வார்டு என ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், பெண்களுக்கான பொது வார்டுகளாக 1, 2, 3, 4, 6, 11, 14, 17, 19, 22, 23, 25, 27, 29, 32, 33 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் பெண்களுக்கு 17 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொது வார்டுகளாக 5, 7, 8, 9, 10, 12, 13, 15, 16, 18, 20, 21, 24, 30, 31 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 
ராமேசுவரம் : ராமேசுவரம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்கு வார்டாக 1 ஆம் வார்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு மட்டும் 4, 5, 7, 11, 13, 15, 16, 17, 19, 20 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கு 10 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 
கீழக்கரை: கீழக்கரை நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் தாழ்த்தப்பட்டோர் பொதுப் பிரிவில் 5 ஆவது வார்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான பொது வார்டுகளாக 2, 4, , 6, 10, 11, 12, 13, 15, 16, 18 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 
பரமக்குடி: பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் தாழ்த்தப்பட்டோர் பொதுப் பிரிவாக 5, 26 வார்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்காக 9, 28, 30 ஆகிய வார்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கான பொது வார்டாக 4, 8, 11,16, 18, 19, 20, 21, 22, 25, 27, 29, 31, 34, 35 ஆகிய வார்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 16 வார்டுகள் ஆண்கள் பொதுப் பிரிவில் ஒதுக்கப்பட்டுள்ளன.கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி  நகராட்சி வார்டுகள் மறுவரையறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com