சுடச்சுட

    

    சிறுதானியங்கள், பயறு வகைகள் சாகுபடி: வேளாண் துறை யோசனை

    By DIN  |   Published on : 14th June 2019 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை தாலுகா விவசாயிகள் நெல்லுக்கு பதிலாக சிறுதானியங்கள் மற்றும் பயிறு வகைப் பயிர்களை சாகுபடி செய்யலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா யோசனை தெரிவித்துள்ளார். 
    இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திருவாடானை வட்டாரம் திகழ்கிறது. இங்கு 26 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்படுகிறது. தற்போது போதிய மழை இல்லாத காரணத்தால் நெல் விதைப்பு செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் நெல்லுக்கு மாற்றுப் பயிராக சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, குதிரை, வாலி, சோளம் போன்ற பயிர்களையும் பயறு வகை பயிர்களான உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிர்களை சாகுபடி செய்யலாம். 
    இதற்கு நெற்பயிரை விட குறைந்த தண்ணீர் போதுமானது. எனவே அனைத்து விவசாயிகளும் இந்த தானிய பயிர்களை சாகுபடி செய்து பலன் பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai