சுடச்சுட

    

    திருவாடானை அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல்: 10 பேர் மீது வழக்கு

    By DIN  |   Published on : 14th June 2019 07:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 10 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    திருவாடானை அருகே உள்ள நல்கிராம வயலைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (23). இவர் வெள்ளையபுரத்தில் உள்ள கோழிக்கறிக் கடையில் புதன்கிழமை மாலை கறி வாங்க வந்துள்ளார்.  அப்போது அதே பகுதியை சேர்ந்த மகேஷ் தனது காரை கறிக் கடைக்கு முன்பாகவும், சதீஷ்குமாரின் இருசக்கர வாகனத்தை வழிமறித்தும் நிறுத்தியுள்ளார். இதனை  சதீஷ்குமார் தட்டிக் கேட்டுள்ளார். இதையடுத்து வியாழக்கிழமை மகேஷ் 10 பேர் கொண்ட கும்பலுடன் வந்து சதீஷ்குமாரை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். 
    இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளையபுரத்தை சேர்ந்த மகேஷ், மதி, அடையாளம் தெரியாத 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai