ராமநாதபுரம் பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 15) நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜி.கங்காதரன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆர்.எஸ்.மடை, ராமநாதபுரம், ரகுநாதபுரம், தேவிபட்டினம், ஆர்.காவனூர் ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான அரண்மனை, புதிய, பழைய பேருந்து நிலையங்கள், கேணிக்கரை, சக்கரக்கோட்டை, பாரதிநகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பட்டணம்காத்தான், சின்னக்கடை, அச்சுந்தன்வயல், செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி, திருப்புல்லாணி, தெற்குத்தரவை, எம்.எஸ்.கே.நகர், பசும்பொன்நகர், கூரியூர், காஞ்சிரங்குடி, புத்தேந்தல், வன்னிக்குடி மற்றும் ரெகுநாதபுரம், பெரிய பட்டணம், முத்துப்பேட்டை, காரான், வண்ணாங்குண்டு, தினைக்குளம், உத்தரவை, சேதுக்கரை, தெற்கு காட்டூர், நைனாமரைக்கான் பகுதி, தேவிபட்டினம், காட்டூரணி, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி பகுதி, பொட்டகவயல், திருப்பாலைக்குடி, சிறுவயல், பெருவயல், சித்தார்கோட்டை உள்ளிட்ட கிராமங்கள். ஆர்.காவனூர், தொருவளூர், முதலூர், கிளியூர், தேத்தாங்கால், குளத்தூர் பகுதி கிராமங்களில் சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கமுதி: இதேபோல் கமுதி கோட்டைமேட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூன்15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் கமுதி, அபிராமம், பார்த்திபனூர், முதுகுளத்தூர், செங்கப்படை, கீழராமநதி, மண்டலமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கமுதி துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் எம்.மாலதி (பொறுப்பு) வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுகுளத்தூர்: கடலாடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கடலாடி , சாயல்குடி, பெருநாழி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என முதுகுளத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் க.மலைச்சாமி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.