சுடச்சுட

  

  ராமநாதபுரம் வர்த்தக சங்கத்துக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் பி.ஜெகதீசன், செயலர் குப்தா ஆர்.கோவிந்தராஜன் ஆகியோர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  ராமநாதபுரம் வர்த்தக சங்கத் தேர்தல் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் 2019-22 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
  அதன் விவரம்: தலைவராக பி.ஜெகதீசன், செயலராக குப்தா ஆர்.கோவிந்தராஜன், பொருளாளராக டால்கா செல்வராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், துணைத் தலைவர்களாக கவிஞர் ஹாஜாமுகைதீன், என்.ஏ.வாசுதேவன், முஹம்மது ராஜா கனி, எஸ்.என். மனோகரன், சோமசுந்தரம் ஆகியோரும், இணைச் செயலர்களாக வைகிங் கருணாநிதி, ராஜாராம் பாண்டியன், சரவணன், ரெங்கராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  கூட்டத்தில் ராமேசுவரம் - சென்னை இடையே பகல் நேர ரயில் சேவையை தொடங்க வேண்டும். நதி நீர் இணைப்புத் திட்டத்தை தென்னிந்தியாவில் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai