கமுதியில் 60 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 14th June 2019 07:47 AM | Last Updated : 14th June 2019 07:47 AM | அ+அ அ- |

கமுதியிலிருந்து மதுரைக்கு லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 60 மூட்டை ரேசன் அரிசியை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
கமுதி வாரச்சந்தை அருகே போலீஸார் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்ட போது அதில் எவ்வித ஆவணம் இன்றி தலா 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் ரேசன் அரிசி இருந்ததும், அதனை மதுரைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அரிசி மூட்டைகள், சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸார், கடத்தலில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த செல்லத்துரை மகன் காந்தி (21) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அரிசி மூட்டைகளை மாவட்ட குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.