கமுதி அருகே கோயில் உண்டியல் உடைப்பு
By DIN | Published On : 18th June 2019 08:06 AM | Last Updated : 18th June 2019 08:06 AM | அ+அ அ- |

கமுதி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கோயிலுக்குள் மர்ம நபர்கள் புகுந்து உண்டியலை உடைத்து பணம் திருடியுள்ளனர்.
கமுதி அருகே உள்ள செந்தனேந்தல் கிராமத்தில் அய்யனார் கோயில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்கள் கோயில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
அதிகாலையில் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், கோயில் திறந்துகிடந்ததைப் பார்த்து நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து கோயில் நிர்வாகத்தினர் சென்று பார்வையிட்டனர். உண்டியலில் 20 ஆயிரத்திற்கு மேல் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.
கோயில் நிர்வாகக்குழுத் தலைவர் சண்முவேல், கமுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கமுதி போலீஸார், உண்டியல் பணத்தை திருடியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.