பரமக்குடியில் சுதந்திரப் போராட்ட தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா
By DIN | Published On : 19th June 2019 08:16 AM | Last Updated : 19th June 2019 08:16 AM | அ+அ அ- |

பரமக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரரும், நாடகத் தந்தையுமான எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் 134 ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
பரமக்குடி காந்திசிலை முன்பு சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ஐ.ஏ.ஹாரிஸ் தலைமை வகித்தார்.சங்கத் தலைவர் டி.ஜெயவீரபாண்டியன், மூத்த துணைத் தலைவர் ஆர்.சண்முகசுந்தரம், கெளரவத் தலைவர் துரை.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனம் மாநில பொதுச் செயலாளர் எஸ்.பி.ராதா, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளர் வி.முகம்மதுஅப்பாஸ், மாவட்ட துணைத் தலைவர் எம்.ஆர்.நாராயணன் ஆகியோர் சுதந்திர போராட்டத்தில் தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸின் பங்கு குறித்து விளக்கி பேசினர்.
பின்னர், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஓய்வுபெற்ற வேளாண் உதவி இயக்குநர் மாமு.மணவாளன், ஆர்.டி.சி.சி. வங்கி வி.வேலு, நல்லாசிரியர் சண்முகசுந்தரம், என்.ஆர்.குப்புச்சாமி ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். விழாவில் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.