கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 22nd June 2019 07:58 AM | Last Updated : 22nd June 2019 07:58 AM | அ+அ அ- |

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை, மீண்டும் பணியில் அமர்த்துவதை எதிர்த்து, கமுதியில் கிராம நிர்வாக அலுவலர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கமுதி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் வட்டாரத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்குப் பதிலாக, புதிதாக படித்த இளைஞர்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்து, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். அதற்கு மாறாக பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்தினால் மாவட்ட, மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என வலியுறுத்தினர். 16 வருவாய் கிராம அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை: ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுலர்களை தொகுப்பூதியத்தில் பணியமர்த்துவது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசானையை ரத்துசெய்யக்கோரி தேவகோட்டை வட்ட கிராம நிர்வாக அலுலர் சங்கம் சார்பாக வெள்ளிக்கிழமை வட்டாட்சியர் அலுலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டத்தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தேவகோட்டை வட்டத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுலர்கள் கலந்துகொண்டனர்.