அரசு பள்ளி மாணவர்களுக்குசட்ட விழிப்புணர்வு முகாம்
By DIN | Published On : 23rd June 2019 12:40 AM | Last Updated : 23rd June 2019 12:40 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கான சட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆணைக்குழு செயலரும், மாவட்ட சார்பு நீதிபதியுமான எம்.பிரீத்தா தலைமை வகித்துப் பேசுகையில், குழந்தைகளுக்கு தொடுதல் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் மதிக்கப்படும் வகையில் கற்பித்தல் இருக்கவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் ராமநாதபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜே.ஜெனித்தா முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் மூத்த வழக்குரைஞர் டி.எம்.அருண் கண்ணன் சிறப்புரையாற்றினார். சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஐ.செல்வராஜ் வரவேற்றார். முகாம் ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு இளநிலை உதவியாளர் ச.லோகநாதன் செய்திருந்தார். ஆணைக்குழு அலுவலர் ஜோ.பி.பிலோமின் நன்றி கூறினர்.