குடிநீர் தொட்டி மேற்கூரை சேதம்: கிராம இளைஞர்கள் சீரமைப்பு

கமுதி அருகே பராமரிப்பின்றி கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்த குடிநீர் தொட்டியை கிராம இளைஞர்கள் சீரமைத்தனர்.

கமுதி அருகே பராமரிப்பின்றி கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்த குடிநீர் தொட்டியை கிராம இளைஞர்கள் சீரமைத்தனர்.
கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டியில் காவிரிக் கூட்டுக் குடிநீர் விநியோகத்துக்காக, ஏற்கெனவே தொடங்கப்பட்டு, கைவிடப்பட்ட நரிப்பையூர் கூட்டுக் குடிநீர் திட்டத் தொட்டியை பயன்படுத்தி வந்தனர். சிறு தொட்டியாக இருப்பதால், கிராம மக்களுக்கு தேவையான குடிநீரை சேமிக்க முடியாமல் அவதிப்பட்டனர். 
இந்நிலையில் குடிநீருக்காக அமைக்கபட்ட இத் தொட்டி மராமத்து பணிகள் மேற்கொள்ளாமல், அதன் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனை சீரமைக்கக் கோரி  கிராம மக்கள் பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இதையடுத்து கிராம மக்கள் தங்களது சொந்த செலவில், இடிந்து விழுந்த கான்கிரீட் கலவைகளை அகற்றினர். மேலும் அத் தொட்டியை சீரமைக்கும் பணியில் கிராம இளைஞர்கள் ஈடுபட்டனர். 
இதன் அருகே 2014 இல், கிராம மக்களின் தண்ணீர் தேவைக்காக அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. அதில் ஆழ்துளை கிணறு வசதியிருந்தும், நீரூற்றில் தண்ணீர் இல்லாததாலும், பராமரிப்பில்லாமலும், பல ஆண்டுகளாக அந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வெறும் காட்சி பொருளாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com