கோட்டக்கரை ஆற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை
By DIN | Published On : 24th June 2019 07:23 AM | Last Updated : 24th June 2019 07:23 AM | அ+அ அ- |

ஆர்.எஸ்.மங்கலம் கோட்டக்கரை ஆற்றின் வழியாக வீணாக கடலுக்குச் தண்ணீர் செல்வதைத் தடுக்க தடுப்பணை கட்ட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் பெரியகண்மாய் மற்றும் அப்பகுதிகளில் உள்ள சிறிய கண்மாய்களில் இருந்து மழைக்காலங்களில் வெளியேறும் உபரி நீரானது, சனவேலி கிராமத்தில் உள்ள கோட்டக்கரை ஆறு வழியாகச் சென்று கடலில் கலக்கிறது. எனவே இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி தண்ணீரை சேமித்து வைத்தால், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வேளாண் சாகுபடிக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே கோட்டடக்கரை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.