காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
By DIN | Published On : 25th June 2019 07:53 AM | Last Updated : 25th June 2019 07:53 AM | அ+அ அ- |

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலையொட்டி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்து முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மீண்டும், அவர்கள் ஏற்கனெவே பணியாற்றிய மாவட்டங்களில் அந்தந்த காவல் சரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி கமுதி ஆய்வாளர் முத்துக்குமார் சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டிக்கும், திருப்புவனத்தில் பணியாற்றிய சேது கமுதிக்கும், சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் இருந்த லட்சுமி அபிராமத்திற்கும், மதுரையிலிருந்த ஜான்ஸிராணி கமுதி அருகே பெருநாழிக்கும், சிக்கல் ஆய்வாளர் ராஜராஜன் பார்த்திபனூருக்கும், சிவகங்கை அனைத்து மகளிர் ஆய்வாளர் அனிதா சிக்கலுக்கும், ராமநாதபுரம் பஜார் ஆய்வாளர் தனபாலன் ராமேஸ்வரத்திற்கும், பார்த்திபனூர் ஆய்வாளர் முத்து பிரேம்சந்த் உச்சிபுளிக்கும், தொண்டி ஆய்வாளர் சரவணன் மண்டபத்திற்கும், மண்டபம் ஆய்வாளர் முகமது நசீர் திருப்பாலைக்குடிக்கும், தேவிபட்டினம் ஆய்வாளர் நாகராஜன் தங்கச்சிமடத்திற்கும், தங்கச்சிமடம் ஆய்வாளர் தேவி கமுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், கீழத்தூவல் ஆய்வாளர் பென்சாம் பரமக்குடிக்கும், பரமக்குடி அனைத்து மகளிர் ஆய்வாளர் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகவும், திருவானந்தம் கடலாடிக்கும் என 39 ஆய்வாளர்கள் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மாவட்டங்களிலிருந்து மீண்டும் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.