காவல் சார்பு-ஆய்வாளரை அரிவாளால் தாக்க முயன்றவர் கைது
By DIN | Published On : 25th June 2019 07:45 AM | Last Updated : 25th June 2019 07:45 AM | அ+அ அ- |

திருவாடானை அருகேயுள்ள எஸ்.பி.பட்டினம் காவல் நிலைய சார்பு-ஆய்வாளரை அரிவாளால் தாக்க முயன்றவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
திருவாடானை அருகே மண்டலகோட்டையைச் சேர்ந்தவர் லூகாஸ் (56). இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு மது போதையில் வெள்ளையபுரம் விலக்கு மணடலகோட்டை பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அவ்வழியாக வந்த எஸ்.பி.பட்டினம் காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் பாலுச்சாமி, அவரிடம் விசாரித்துள்ளார். அதில், தன்னை எப்படி விசாரிக்கலாம் என தரக்குறைவாகப் பேசிய லூகாஸ், அரிவாளால் தாக்க முயன்றாராம்.
இது குறித்து சார்பு-ஆய்வாளர் பாலுச்சாமி அளித்த புகாரின்பேரில், காவல் நிலைய ஆய்வாளர் மோகன் வழக்குப் பதிந்து லூகாஸை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.