வாலிநோக்கம் கடற்கரையில் பீடி இலை மூட்டைகள் ஒதுங்கின
By DIN | Published On : 25th June 2019 07:55 AM | Last Updated : 25th June 2019 07:55 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் கடற்கரைப் பகுதியில் திங்கள்கிழமை மாலை பீடி இலைகள் அடங்கிய 10 சிறிய மூட்டைகள் கரை ஒதுங்கின.
சமீபமாக, ராமநாதபுரம் கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலை மூட்டைகள் கடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. கலால் வரிச் சோதனையில் அவ்வப்போது பீடி இலைகள் பிடிபட்டும் வருகின்றன.
இந்நிலையில், வாலிநோக்கம் கடற்கரையில் 10 சிறிய மூட்டைகள் ஒதுங்கியது குறித்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே, அங்கு சென்ற போலீஸார், மூட்டைகளைப் பிரித்து பார்த்தபோது அவற்றில் பீடி தயாரிப்பதற்கான இலைகள் இருந்துள்ளன. அவற்றை போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.