சுடச்சுட

  

  ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் திமுக வழக்குரைஞர்கள் அணியினர் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
   திமுக வழக்குரைஞர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் ஏ.மனோகரன் தலைமையில் அவர்கள் மனு அளித்தனர். அதில், காவடிபட்டி கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடி தொடர்பாக திமுக மாவட்டப் பொறுப்பாளரை சம்பந்தமின்றி தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டும், சமூக வலை தளங்களில் பதிவிட்டும் வருவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரியிருந்தனர். 
   மனு அளித்தது குறித்து திமுக வழக்குரைஞர் அணியினர் கூறுகையில், தவறான செய்தியைப் பரப்பியவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது என்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai