கொல்லங்குளம் நிறைகுளத்து அய்யனார் கோயில் மண்டலாபிஷேகம்
By DIN | Published On : 04th March 2019 07:34 AM | Last Updated : 04th March 2019 07:34 AM | அ+அ அ- |

கமுதி அருகே கொல்லங்குளம் ஸ்ரீநிறைகுளத்து அய்யனார் ஆதிலிங்கேஸ்வரர் கோயில் மண்டலாபிஷேகம், ஆறு கால யாக பூஜைகளுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கொல்லங்குளம், புல்வாய்க்குளத்திலிருந்து பக்தர்கள் பால்குடம் சுமந்து, ஊர்வலமாக சென்று, ஸ்ரீநிறைகுளத்து அய்யனார் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பரிகார தெய்வங்களான அய்யனார், கருப்பணசாமி, முனியப்பசாமி, விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பிரார்த்தனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பேரையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 1000 க்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.