Enable Javscript for better performance
மக்கள் நீதிமன்றத்தில் 700 வழக்குகளுக்கு தீர்வு- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் நீதிமன்றத்தில் 700 வழக்குகளுக்கு தீர்வு

    By DIN  |   Published on : 11th March 2019 05:02 AM  |   அ+அ அ-   |    |  


    ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 700-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
    ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை, மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான ஏ.கயல்விழி தொடங்கி வைத்து, பேசியதாவது:
    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 5,525 வழக்குகளில் 3,413 வழக்குகள் 14 அமர்வுகளில் விசாரிக்கப்படுகின்றன. அவற்றில் 2,118 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும், 1,225 வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கு முந்தைய நிலையிலும் உள்ளன. 
    மக்கள் நீதிமன்றத்தில் பேசித் தீர்க்கப்படும் வழக்குகளின் முடிவை சம்பந்தப்பட்டவர்கள் மனநிறைவுடன் ஏற்கவேண்டும். மக்கள் நீதிமன்ற தீர்வுக்கு வழக்குரைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தொடர்ந்து தீர்வு காணப்பட்டு வருகிறது. ஆகவே பொதுமக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
    விசாரணை: ராமநாதபுரத்தில் விபத்து காப்பீடு தொடர்பான வழக்கில் பட்டணம்காத்தானைச் சேர்ந்த வேம்பாயியின் (50), கணவர் இறப்புக்கு ரூ.10 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்படவில்லை. இந்நிலையில், மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ரூ.6.30 லட்சம் வழங்குவதற்கு நிறுவனம் சம்மதித்ததால் வழக்கு முடித்துவைக்கப்பட்டது. 
    கடந்த 2011 இல் முதலூரைச் சேர்ந்த இந்திராவின் கணவர் விஜயகுமார், அரசுப் பேருந்திலிருந்து இறங்கும் போது விழுந்து உயிரிழந்த வழக்கில் அரசுப் போக்குவரத்துக் கழகம் வட்டியுடன் சேர்த்து ரூ.12.50 லட்சம் வழங்க வேண்டும். இந்நிலையில், சமரசம் மூலம் ரூ.11 லட்சம் வழங்க போக்குவரத்துக்கழகம் சம்மதித்தது. இதேபோல், ராமேசுவரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் விபத்து காப்பீடு நிதி பெற்றுத்தரப்பட்டது. 
    ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி எம்.பிரீத்தா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.ராமகிருஷ்ணன், மூத்த வழக்குரைஞர் பி.முனியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான வி.ராமலிங்கம் வரவேற்றார்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp