Enable Javscript for better performance
விவேகானந்தர் வழியில் நடந்தால் இளைஞர்கள் லட்சியத்தை அடையலாம்: சுவாமி சுதபானந்தர்- Dinamani

சுடச்சுட

    

    விவேகானந்தர் வழியில் நடந்தால் இளைஞர்கள் லட்சியத்தை அடையலாம்: சுவாமி சுதபானந்தர்

    By DIN  |   Published on : 11th March 2019 01:12 AM  |   அ+அ அ-   |    |  


    சுவாமி விவேகானந்தர் வழியில் இன்றைய இளந்தலைமுறையினர் நடைபோட்டால் வாழ்க்கையில் எந்தப் பிரச்னையுமின்றி லட்சியத்தை அடையலாம் என ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தர் கூறினார்.
    சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரின் 184 ஆவது ஜயந்தி விழா ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிகாலை மங்கள ஆரத்தியுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணர் ஒரு கல்பதரு' எனும் தலைப்பில் சுவாமி சுதபானந்தர் பேசியதாவது: உலகில் பாரதம் தனிப்பெரும் பண்பாட்டு தளமாக விளங்குகிறது எனில் அதற்கு அடித்தளமிட்டவர் சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர். தியாகமனப்பான்மையுடனும், நேர்மையுடனும் செயல்படுவதே வாழ்க்கையின் உன்னத நிலையை அடைய வழிவகுக்கும் என்ற நமது பாரதத்தின் பண்பாட்டுடன் வாழ்ந்து காட்டியவர். தனது தவவாழ்க்கையை தனது சீடர்களுக்கான பாடமாக எடுத்துக் காட்டியவர். பக்தர்களைத் தமது குழந்தையாகப் பாவித்து வாழ்ந்தவர் சுவாமி ராமகிருஷ்ணர். 
     பாரதத்தை சக்தியின் வடிவமாகப் போற்றிய பரமஹம்சரின் சீடராக விளங்கிய சுவாமி விவேகானந்தர் அவரது வழியில் பாரதப் பெருமையை உலகிற்கே உணர்த்தினார். சிகாகோ நகரில் அவர் ஆற்றிய ஆன்மிகச் சொற்பொழிவு நமது பண்பாட்டினை உலகம் அறியவைத்தது என்பதே உண்மை. 
     வாழ்வியல் அறத்தையும், ஏழைகளுக்கு உதவும் தியாகத்தையும் வலியுறுத்திய சுவாமி விவேகானந்தர் வழியில் இன்றைய இளந்தலைமுறையினர் நடைபோட்டால் வாழ்க்கையில் எந்தப் பிரச்னையுமின்றி லட்சியத்தை அடையலாம் என்றார். 
     நிகழ்ச்சியில், சிறப்புப் பூஜைகள், பஜனை நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. ராமகிருஷ்ண பரமஹம்சர் ஜயந்தியை முன்னிட்டு ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் நாகாச்சி கிராமத்தில் வியாழக்கிழமை மாலையில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு இலவச ஆடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமி சுதபானந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp