சுடச்சுட

  

  கமுதி அருகே பசும்பொன்னில் 3 மக்களவைத் தொகுதிகளுக்கு, தமிழ்நாடு தேவர் பேரவை சார்பில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம், அமைப்பின் தலைவர் முத்தையா தலைமையில் வெள்ளிக்ழமை நடைபெற்றது.
   இதில் ராமநாதபுரம் மக்களவை தொகுதிக்கு தமிழ்நாடு தேவர் பேரவையின் தென் மண்டல இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமிபாண்டியன், சிவகங்கை தொகுதிக்கு மாவட்ட அமைப்பாளர் சிங்கதுரைத் தேவர், திண்டுக்கல் தொகுதிக்கு மாவட்ட அமைப்பாளர் ஈஸ்வரன் ஆகியோரை கட்சியின் தலைவர் முத்தையா அறிமுகம் செய்து பேசியதாவது: நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், தேவர் சமுதாயத்தை திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் புறக்கணித்துள்ளன.
  ஒரு தொகுதியில் கூட போட்டியிட வாய்ப்பளிக்காததால், தமிழ்நாடு  தேவர் பேரவையின் சார்பில், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மக்களவை தொகுதிகளில் மட்டுமே தற்போது, தனித்துப் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் உள்ளாட்சி, சட்டப்பேரவை தேர்தல்களிலும் இதேபோன்று, தனித்துப் போட்டியிடுவோம் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai