சுடச்சுட

  

  முதுகுளத்தூர் அருகே பூச்சி மருந்து அடித்த பருத்தி இலையை தின்ற 40-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.
  முதுகுளத்தூர் அருகே ஏனாதி  கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தமூர்த்தி. இவருக்கு சொந்தமான வெள்ளாடுகள் ஊருக்கு அருகில் 1 கி.மீ தொலைவில் உள்ள பருத்தி, மிளகாய் வயல்களில் மேய்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது வயல்களில் பருத்திக்கு பூச்சி மருந்து தெளித்து உள்ளனர். இதன் இலைகளை தின்ற 40-க்கும் மேற்பட்ட  ஆடுகள் உயிரிழந்தன.  இது குறித்து பேரையூர் காவல்நிலையத்தில் சாந்தமூர்த்தி அளித்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து ஏனாதி கிராமத்திற்கு சென்று இறந்த ஆடுகளை முதுகுளத்தூர் வட்டாட்சியர் மீனாட்சி பார்வையிட்டார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai