சுடச்சுட

    

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 16th March 2019 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ராமநாதபுரம்  அரண்மனை முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க தாலுகா தலைவர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்டச் செயலர் கண்ணகி சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் குருவேல், எல்ஐசி சங்க  கிளை செயலர் முத்துப்பாண்டி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் தட்சிணாமூர்த்தி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்டச் செயலர் கதிரேசன்  மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
    அதே போல் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். வட்டக் கிளைத் தலைவர் முனிஸ்பிரபு முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர் கணேசமூர்த்தி சிறப்புரையாற்றினார். சண்முகநாததுரை நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai