ஏடிஎம்.,மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ. 9 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரம் அருகே உரிய ஆவணமின்றி ஏடிஎம்., மில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ. 9 லட்சத்தை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைப்பற்றினர்.

ராமநாதபுரம் அருகே உரிய ஆவணமின்றி ஏடிஎம்., மில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ. 9 லட்சத்தை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைப்பற்றினர்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 12-க்கும் மேற்பட்ட பறக்கும்படையினர் 24 மணி நேர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு தேவிபட்டினம் பகுதியில் திட்ட அதிகாரி முனியசாமி தலைமையில் காவல் ஆய்வாளர் சுல்தான் இப்ராஹிம் அடங்கிய குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது கிழக்கு கடற்கரைச் சாலையில் தனியார் பேக்கரி அருகே ஏடிஎம்.,களில் பணம் நிரப்பும் தனியாருக்குச் சொந்தமான வாகனம் நின்றிருந்தது. வாகனத்தில் இருந்த பணத்துக்கான ஆவணங்களை  பரிசோதித்தனர். 
வாகனத்தில் மொத்தம் ரூ.2.81 கோடிக்கு உரிய கணக்கு இருந்தது. அவை ஏடிஎம்களில் நிரப்புவதற்காக எடுத்துவரப்பட்டவை என வாகனத்தில் வந்தவர்கள் கூறினர். 
ஆனால், வாகனத்தில் மீதம் இருந்த ரூ.9 லட்சத்துக்கான கணக்கை பறக்கும் படையினர் கேட்டபோது அதற்கு தனியாக கணக்கு இல்லை என்றும், மொத்தப் பணத்தோடு அவற்றின் கணக்கு சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 
ஆனாலும், பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். உரிய கணக்கை அளித்து விட்டு பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு  சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடமும் பறக்கும் படையினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com