ராமநாதபுரம் அருகே பெண் குழந்தைகள் மீட்பு

ராமநாதபுரம் அருகே பாதுகாப்பற்ற நிலையில் வசித்து வந்த மீனவர் குழந்தைகள் 3 பேரை குழந்தைகள் உதவி மையத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளிக்கிழமை மீட்டனர்.


ராமநாதபுரம் அருகே பாதுகாப்பற்ற நிலையில் வசித்து வந்த மீனவர் குழந்தைகள் 3 பேரை குழந்தைகள் உதவி மையத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளிக்கிழமை மீட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள இடிந்தகல்புதூரைச் சேர்ந்த மீனவர் மாரிமுத்து. இவரது மனைவி பிரிந்து சென்ற நிலையில், 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவர் கடலுக்கு அடிக்கடி மீன்பிடிக்கச் செல்வதால், பெண் குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் கூரை வீட்டில் வசிக்கும் நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் விரைந்து சென்று 16, 10 மற்றும் 5 வயதுள்ள 3 பெண் குழந்தைகளையும் மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மாணவர்களுக்கு வாக்காளர்கள் உறுதிமொழிப் பத்திரம் வழங்கல்ராமநாதபுரம், மார்ச் 23: பெற்றோர்களிடத்தில் மாணவர்கள் மூலம் வாக்களிப்பதன் அவசியத்தை ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் உறுதிமொழிப் பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் முழுமையான வாக்குப்பதிவை எட்டும் வகையில் மாவட்டத்தில் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், ராமநாதபுரம் நகரில் உள்ள சையது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகள் மூலமாக அவர்தம் பெற்றோர்களிடத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெற்றோர்களிடமிருந்து கையொப்பம் பெற்று வருவதற்கான வாக்காளர் உறுதிமொழி பத்திரங்கள் வழங்கப்பட்டன. அதை மாணவர்களிடத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கொ.வீரராகவராவ் வழங்கினார். 
பின்னர் கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.  அங்கு செய்தி மக்கள் தொடர்பு அலுவலக விளம்பர வாகனத்தின் மூலம்  வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தை ஆட்சியர் தொடக்கி வைத்தார்.  
நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் த.கெட்சி லீமா அமலினி, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.சுமன், மாவட்டக் கல்வி அலுவலர் டி.பிரேம், சதக் கல்வி அறக்கட்டளை தலைவர் எஸ்.எம்.முகம்மது யூசுப், சதக் பொறியியல் கல்லூரி முதல்வர்  ஜெ.அப்பாஸ் முகைதீன், கீழக்கரை வட்டாட்சியர் பபிதாசிக்கந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com