Enable Javscript for better performance
திருப்புல்லாணியில் பழமையான கற்சிலை கண்டெடுப்பு- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பெரியபட்டினத்தில் வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது பழமையான தட்சிணாமூர்த்தி கற்சிலை செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது. 
    திருப்புல்லாணிப் பகுதியில் உள்ளது பெரியபட்டினம். இங்குள்ள ஜலாலுதீன் தெருவில் வசிப்பவர் சரீப்ஹான் (35). இவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது சுமார் நூற்றாண்டுகள் பழமையான தட்சிணாமூர்த்தி கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. 
    இதுதொடர்பாக தகவலறிந்து அங்கு வந்த வருவாய்த்துறை அலுவலர்கள் சிலையை மீட்டனர்.  உரிய சோதனைக்குப் பிறகு ராமநாதபுரத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் சிலை பாதுகாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai