Enable Javscript for better performance
மீனவர் கொலை வழக்கில் சகோதரர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் அருகே மீனவ இளைஞர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது சகோதரரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகேயுள்ளது மொத்திவலசை. இக்கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம் மகன்கள் சதீஷ் (31), ரமேஷ் (29). இருவரும் மீனவர்கள். சதீஷுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அவரது மனைவி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். ரமேஷுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்தநிலையில், குடும்பத்தகராறு காரணமாக சகோதரர்கள் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை இரவும் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 
    இந்தநிலையில், வியாழக்கிழமை காலையில் தலையில் கத்திக்குத்து காயத்துடன் வீட்டில் ரமேஷ் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்த திருப்புல்லாணி போலீஸார் சென்று ரமேஷின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில் சகோதரர்களிடையே ஏற்பட்ட தகராறில் சதீஷ் கத்தியால் தாக்கியதில் ரமேஷ் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து சதீஷை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai