Enable Javscript for better performance
முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு இந்திய கம்யூ. வாக்கு சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு இந்திய கம்யூ. வாக்கு சேகரிப்பு

    By DIN  |   Published on : 28th March 2019 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்னியூஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழமை  தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.
    ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளராக நவாஸ்கனி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து   திருவாடானை தெற்குத் தெருவில் நடைபெற்ற இந்த பிரசாரத்துக்கு இந்திய கம்யூ. தாலுகா தலைவர் சேதுராமு தலைமை வகித்தார். தாலுகா குழு உறுப்பினர் நாகநாதன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் முத்துராமு, கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன் சிறப்புரையாற்றினார்.வேட்பாளர் நவாஸ் கனிக்கு ஏணி சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai