Enable Javscript for better performance
ராமநாதபுரத்துக்கு இன்று மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் வருகை- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரத்துக்கு இன்று மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் வருகை

    By DIN  |   Published on : 28th March 2019 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல் வியாழக்கிழமை (மார்ச் 28) பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
    ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. அதன் வேட்பாளராக என்.நயினார்நாகேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார்.   இந்த நிலையில், அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனி ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில் இருந்து வியாழக்கிழமை காலை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வருகிறார். அங்கிருந்து ராமேசுவரம் சென்று சாமி தரிசனம் செய்கிறார். மண்டபத்திலிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கும் அவர், பின்னர் பட்டினம்காத்தானில் பாஜக தேர்தல் அலுவலகத்திற்கு வந்து வாக்குச்சாவடி முகவர்கள், கட்சிப் பிரமுகர்கள், கூட்டணி கட்சிப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேசுகிறார். 
    பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கைக்குச் செல்லும் பியூஸ்கோயல், அங்கும் பாஜக வாக்குச்சாவடி முகவர்கள், கூட்டணிக் கட்சியினரைச் சந்தித்த பின்னர் திருச்சி சென்று விமானம் மூலம் புதுதில்லி செல்கிறார். மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் வருகையை முன்னிட்டு பாஜக வேட்பாளர் என்.நயினார்நாகேந்திரன் மற்றும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் குப்புராம், மாவட்டத் தலைவர் முரளிதரன், செயலர் ஆத்மகார்த்தி உள்ளிட்டோர் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். 
    நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: செவ்வாய்க்கிழமை இரவு ராமநாதபுரத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எம்.மணிகண்டன், ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் ஏ.அன்வர்ராஜா, வேட்பாளர் நயினார்நாகேந்திரன், பாஜக மாநிலத் துணைத் தலைவர் குப்புராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai