Enable Javscript for better performance
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.4.53 கோடி- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.4.53 கோடி

    By DIN  |   Published on : 28th March 2019 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் வ.து.ந.ஆனந்தின் சொத்து மதிப்பு ரூ.4.53 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் அமமுக வேட்பாளராக வ.து.ந.ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கையிருப்பாக ரூ.1 லட்சம், 2.40 லட்சம் மதிப்புள்ள 80 பவுன் நகைகள் உள்பட அசையும் சொத்துக்கள் மொத்தம் ரூ.1.34 கோடியும், அசையாச் சொத்துகள் ரூ.3.19 கோடி என மொத்தம் 4.53 கோடி சொத்துகள்இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
    அமமுகவின் மாற்று வேட்பாளரான வ.து.ஆனந்தின் மனைவி வனிதாவின் கையிருப்பாக ரூ.60 ஆயிரமும், ரூ.35 லட்சம் மதிப்புள்ள 150 பவுன் நகைகள் என மொத்தம் ரூ.36 லட்சத்து 69 ஆயிரம் சொத்து மதிப்பாக காட்டப்பட்டுள்ளது.  அமமுக வேட்பாளர் தேர்தல் விதிமுறையை மீறி வாகனங்களில் சென்றதாக கேணிக்கரை, கமுதி, முதுகுளத்தூர் உள்ளிட்ட இடங்களில் பதிவான வழக்குகள் தவிர வேறு வழக்குகள் இல்லை எனவும் உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சொத்து விவரம்: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கான மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் ஜே.விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் தனது வேட்பு மனுவுடன் சொத்து மதிப்பு குறித்த பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்தார். 
     அதனடிப்படையில் விஜயபாஸ்கரின் கையிருப்பாக ரூ.6 லட்சம், வாகனம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 100 கிராம் தங்கம் உள்ளது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மொத்தம் அவருக்கு ரூ.19.76 லட்சம் அசையும் சொத்து உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வாகனமாக கார் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    வேட்பாளர் விஜயபாஸ்கரின் மனைவி மோனிகா கையிருப்பாக ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.6  லட்சம் மதிப்புள்ள 25 பவுன் தங்கம் உள்பட மொத்தம் ரூ.6.50 லட்சம் மதிப்பு சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai