Enable Javscript for better performance
ராமேசுவரத்தில் முஸ்லிம் லீக் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரத்தில் முஸ்லிம் லீக் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

    By DIN  |   Published on : 28th March 2019 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மக்களவை தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் புதன்கிழமை ராமேசுவரத்தில் வாக்கு சேகரித்தார். 
      திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நவாஸ்கனி போட்டியிடுகிறார். அவர் புதன்கிழமை ராமேசுவரத்தில்  தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து வாக்கு சேகரித்தார். முன்னதாக ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் திமுக நகரச் செயலாளர் நாசர்கான் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். 
     இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், முன்னாள் எம்.பி.பவானி ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் முருகபூபதி, மார்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலாளர் காசிநாததுரை, விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டலச் செயலாளர் யாசின் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து, நவாஸ்கனி  பல்வேறு இடங்களுக்குச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai