சுடச்சுட

    

    மீனங்குடியில் தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக பொதுமக்கள் மனு

    By DIN  |   Published on : 17th May 2019 06:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம் மீனங்குடியில் தரமற்ற முறையில் சாலைகள் அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
     ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவில் எஸ்.வெள்ளாங்குளம், மேலச்செல்வனூர், மீனங்குடி உள்ளிட்ட 7 கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்களின் போக்குவரத்துக்கு பிரதான சாலையாக மீனங்குடி சாலை உள்ளது.
       சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்தச் சாலையானது, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புதான் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் புதுப்பித்த சில மாதங்களிலேயே சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
     பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததன் பயனாக பிரதம மந்திரி கிராமச் சாலை திட்டத்தில் சுமார் ரூ.3.50 கோடியில் சாலையை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், கூலித் தொழிலாளர்கள் மூலம் தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டு வருவதாக அப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
    இந்நிலையில் எஸ்.வெள்ளாங்குளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வியாழக்கிழமை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai