Enable Javscript for better performance
கோடை உழவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம்- Dinamani

சுடச்சுட

    

    கோடை உழவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம்

    By DIN  |   Published on : 20th May 2019 07:18 AM  |   அ+அ அ-   |    |  

    கோடை உழவு செய்வதால் கூடுதல் மகசூல் பெறலாம் எனவும்,  விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் எனவும் முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் சி.ஆர்.கேசவராமன் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் கோடை உழவு செய்வதால் நிலத்தின் தன்மை மாறுபடும். இதனால்விவசாய காலங்களில் வழிந்தோடி வீணாகும் தண்ணீர் தடுக்கப்படும். உழவு செய்யாத வயல்களில் மேல் மண் அரிமானம் ஏற்பட்டு மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைய ஆரம்பிக்கும். இதனால் நிலத்தின் விளையும் பயிர்களின் மகசூல்  குறையும். கோடை உழவு செய்வதால் மழையின் ஈரப்பதத்தை மண் சேகரித்து வைக்கும். 
    மண்ணுக்கு அடியில் காணப்படும் கூட்டுப்புழுக்கள் மேற்பரப்பிற்கு வரும். இதனால் பறவைகளுக்கு இரையாகும் அல்லது வெயிலில் இறந்து விடும். மேலும் களைகளின் வேர்ப்பகுதி களையப்படுவதால்  விவசாய காலங்களில் களைகள் முற்றிலும் குறைந்து விடும். மேலும் அரசு  கோடை உழவினை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் கீழ் மானியம் வழங்குகிறது. 
    முதுகுளத்தூர் வட்டம் மேலக்கொடுமலூர் கிராமத்தினை தலைமையிடமாகக் கொண்டு அதனை சுற்றியுள்ள கிராமங்கள் அடங்கிய ஆயிரம் ஹெக்டேர் அளவிலான தொகுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் விளையும் தானியங்களான சோளம், கம்பு, குதிரைவாலி, உளுந்து மற்றும் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கோடை உழவிற்காக ஏக்கருக்கு ஒன்றிற்கு ரூ.500 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதனைப் பெற விரும்பும் பயனாளிகள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, 2 மார்பளவு புகைப்படம்  ஆகிய ஆவணங்களை வேளாண்மை அலுவலகத்தில் கொடுத்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp