தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றக் கோரிக்கை
By DIN | Published On : 20th May 2019 07:20 AM | Last Updated : 20th May 2019 07:20 AM | அ+அ அ- |

திருவாடானையில் மதுரை -தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானையில் மதுரை -தொண்டி தேசிய நெடுஞ்சாலை வாகனங்கள் அதிகமாக செல்லும் பகுதியாகும். மேலும் நீதிமன்றம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நூல் நிலையம் வேளாண்மை துறை கிட்டங்கி உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. எனவே பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியாகவும் இப்பகுதி உள்ளது. இந்நிலையில் பலத்த காற்று அடித்தால் முறிந்து விழும் அபாய நிலையில் சேதமடைந்த மின்கம்பம் உள்ளது.
எனவே இந்த மின் கம்பத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.