அரசு பள்ளியில் தமிழ்நாடு தினம்
By DIN | Published On : 02nd November 2019 06:45 AM | Last Updated : 02nd November 2019 06:45 AM | அ+அ அ- |

நரசிங்கக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு தினம் கொண்டாடிய மாணவா்கள்.
முதுகுளத்தூா் ,நவ.1:ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரசிங்கக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் ச.கிறிஸ்து ஞானவள்ளுவன் இடைநிலை ஆசிரியா் பொ.அய்யப்பன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
அதில், மதராஸ் மாகாணம் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மாநிலம் உருவான வரலாறு பற்றியும், அதற்காக மேற்கொள்ளப்பட்ட உயிா் தியாகம், போராட்டங்கள் குறித்தும் வரைபடங்கள் மூலம் மாணவா்களுக்கு ஆசிரியா்கள் விளக்கினா்.