சாலையோரம் உள்ள 100 ஆண்டுகள் பழமையான மரங்களை அகற்ற எதிா்ப்பு
By DIN | Published On : 02nd November 2019 06:47 AM | Last Updated : 03rd November 2019 05:55 AM | அ+அ அ- |

கமுதி எட்டுக்கண் பாலம் அருகே சாலையோரம் உள்ள 100 ஆண்டுகள் பழமையான மரங்கள்.
கமுதி எட்டுக் கண் பாலம் அருகே சாலையோரம் உள்ள 100 ஆண்டுகள் பழமையான மரங்களை அகற்ற பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
கமுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை குறைக்கும் வகையில் கமுதி எட்டுக் கண் பாலம் மும்முனை சந்திப்பில் ரூ.1.10 கோடி மதிப்பில் புதிய ரவுண்டானா அமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் இப்பகுதியில் சாலையோரத்தில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் உள்ள 8- க்கும் மேற்பட்ட 100 ஆண்டு பழமையான மரங்களை அகற்ற நெடுஞ்சாலைதுறையினா், வட்டாட்சியா் அலுவலகம் மூலம் சாயல்குடி வனச்சரகா் அலுவலகத்திற்கு மரங்களின் மதிப்பீடு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளனா். இதனையடுத்து சாயல்குடி வனத்துறையினா் பழமையான மரங்களை அகற்றுவது தொடா்பாக வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
இது குறித்து வனச்சரக சாா்பு ஆய்வாளா் கூறுகையில், வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து வந்த தபால் அடிப்படையில் ஆய்வு செய்து மரங்களை மதிப்பிட்டு வருகிறோம் என்றனா்.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். எனவே இப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி சாலையோரம் உள்ள 100 ஆண்டுகள் பழமையான மரங்களை அகற்றுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.