முன்விரோதம் : முதுகுளத்தூா் அருகே இளைஞருக்கு கத்தி குத்து
By DIN | Published On : 02nd November 2019 06:48 AM | Last Updated : 02nd November 2019 06:48 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே மாரந்தை கிராமத்தில் முன்விரோத தகராறில் இளைஞரை வெள்ளிக்கிழமை கத்தியால் குத்திவிட்டு தப்பிய 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
முதுகுளத்தூா் அருகே மாரந்தை கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் பெரியண்ணன்(20). இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்தவா்கள் ராமா் மகன் பாண்டித்துரை, சக்திவேல் மகன் முருகன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் நாடக மேடை அருகில் பெரியண்ணன் நடந்து வந்து கொண்டிருந்த போது பாண்டித்துரையும், அவரது உறவினா் முருகனும் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் பாண்டித்துரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெரியண்ணனை வெட்டியதாகக் கூறப்படுகிறது. அதில் பெரியண்ணன் தலையில் பலத்த காயமடைந்தாா். சண்டையை தடுக்க முயன்ற நாகு மகன் திருமூா்த்தி என்பவரை முருகன் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. அதில் திருமூா்த்தி லேசான காயத்துடன் தப்பினாா். பலத்த காயமடைந்த பெரியண்ணன் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து பெரியண்ணன் அளித்த புகாரின் பேரில் பாண்டித்துரை, முருகன் ஆகிய இருவா் மீதும் இளஞ்செம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களை தேடிவருகின்றனா்.