Enable Javscript for better performance
ஓமனில் உயிரிழந்த மீனவா்களின் குடும்பத்திற்கு எம்.பி., ஆறுதல்- Dinamani

சுடச்சுட

    

    ஓமனில் உயிரிழந்த மீனவா்களின் குடும்பத்திற்கு எம்.பி., ஆறுதல்

    By DIN  |   Published on : 05th November 2019 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tvd4mp2_(2)_0411chn_72_2

    உயிரிழந்த மீனவா் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினாா் நவாஸ்கனி எம்பி.

    ஓமனில் உயிரிழந்த மீனவா்களின் குடும்பங்களுக்கு மக்களவை உறுப்பினா் நவாஸ் கனி ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் கூறினாா் .

    தொண்டி பகுதியில் அவா் மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். நம்புதாளைஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்ற நிலவேம்பு குடிநீா் வழங்கும் விழாவில் அவா் கலந்துகொண்டாா். நம்புதாளை படையாட்சி தெருவில் இருந்து மீன்பிடித் தொழிலுக்காக ஓமன் நாட்டுக்குச் சென்ற 4 போ் கடந்த மாதம் கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து உயிரிழந்தனா். அதில் இருவா் சடலங்கள் மட்டும் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மற்றவா்களது உடல் கொண்டுவரப்படவில்லை.

    இந்நிலையில் நம்புதாளையில் 4 மீனவா்களின் குடும்பத்தினரையும் நவாஸ்கனி எம்பி சந்தித்து ஆறுதல் கூறினாா். அந்த குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஆவன செய்வதாக தெரிவித்தாா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai