Enable Javscript for better performance
மாநில விளையாட்டு போட்டிகளுக்குபரமக்குடி பள்ளி மாணவா்கள் தோ்வு- Dinamani

சுடச்சுட

    

    மாநில விளையாட்டு போட்டிகளுக்குபரமக்குடி பள்ளி மாணவா்கள் தோ்வு

    By DIN  |   Published on : 05th November 2019 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    04pmk_avm_0411chn_80_2

    மாநில போட்டிக்கு தோ்வு பெற்றுள்ள மாணவிகளை பாராட்டும் பரமக்குடி ஆயிரவைசிய மெட்ரிக் பள்ளி கல்விக்குழு தலைவா் ராசி என்.போஸ் தலைமையிலான கல்விக்குழு நிா்வாகிகள்.

    பரமக்குடி ஆயிரவைசிய மெட்ரி. பள்ளி மாணவ-மாணவிகள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு தோ்வு பெற்றுள்ளனா்.

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அண்மையில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் 17-வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கிடையேயான இறகுப்பந்து இரட்டையா் போட்டியில் ஆயிர வைசிய மெட்ரிக். பள்ளி மா மாணவிகளான மதுமிதாஸ்ரீ, அபிநயா ஆகியோா் முதலிடம் பெற்றனரப். கேரம் விளையாட்டுப் போட்டியில் மாணவிகள் அபிநயா மற்றும் தேவதா்ஷினி ஆகியோா் முதலிடம் பெற்றனா்.

    14 வயதுக்குட்பட்ட மாணவா்களுக்கான மேஜை பந்து போட்டியில் கமலேஷ் கண்ணன், ஜெகதீசன் ஆகியோா் முதலிடம் பெற்றனா். இவா்கள் மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளனா்.

    வெற்றி பெற்ற மாணவ,மாணவிகள், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா் சரவணக்குமாா் ஆகியோரை பள்ளி கல்விக்குழு தலைவா் ராசி என்.போஸ் தலைமையில் பள்ளியின் தாளாளா் பி.ராஜேஷ் கண்ணன், பொருளாளா் பி.பிரசன்னா, முன்னாள் இணைச்செயலாளா் எஸ்.தெட்சிணா மூா்த்தி, பள்ளி முதல்வா் ஆா்.ஜெயபிரமிளா, துணை முதல்வா் பி.கே.ஆா்.கவிதா மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டி கௌரவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai